திருநெல்வேலி மாவட்டம் களக்காடு ஜே.ஜே.நகர் பகுதியை சேர்ந்தவர் அசோக்குமார்(38). இவர் அங்குள்ள நாங்குநேரி ரோட்டில் ஹார்டுவேர்ஸ் கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் அசோக்குமார் தனது குடும்பத்தினருடன் வெளியூருக்கு சென்றுள்ளார். இதையடுத்து வீட்டுக்கு நேற்று காலை திரும்பி வந்துள்ளனர்.அதன்பின்னர் வீட்டிற்குள் சென்று பார்த்தபோது அங்கு வைத்துள்ள பீரோ திறக்கப்பட்டு அதில் இருந்த பொருட்கள் சிதறி கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். இதனிடையே பீரோவில் வைத்திருந்த ரூ.3 லட்சத்து 18 ஆயிரம் திருட்டு போயிருப்பது தெரியவந்தது.மேலும் வீட்டின் பின்பக்க ஜன்னல் உடைக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து தகவலறிந்த களக்காடு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். இதைதொடர்ந்து அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தனர். இதில் அதே பகுதியை சேர்ந்த பெரியசாமி மனைவி மாரியம்மாள், தன் மகன்களுடன் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் மாரியம்மாளையும், அவருடைய மகன்களையும் பிடித்த போலீசார் அவர்களிடமிருந்து பணத்தை மீட்டு தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.