கிராமங்களில் சிலம்பம் வீரர்களை உருவாக்க இலவச பயிற்சி அளிப்பு
சிலம்பம் இலவச பயிற்சி அளிப்பு
விக்கிரவாண்டி ஒன்றியம் முட்டத்துார் கிராமத்தை சேர்ந்த இளைஞர் சுரேந்தர். இவர் கிராம புற பாமர மக்களின் விளையாட்டு ஆர்வத்தை ஊக்குவிக்கும் வகையிலும் , பாரம்பரிய வீர விளையாட்டான சிலம்பத்தை இளைஞர்களிடம் கொண்டு சேர்த்து எதிர்காலத்தில் வீர இளைஞர்கள், இளம் பெண்கள் உருவாக வேண்டும் என்ற உயரிய நோக்கத்துடன் சிலம்பம் விளையாட்டை இலவசமாக கற்றுத்தருகிறார்.இதன் காரணமாககடந்த ஆண்டு இவரது மாணவர்கள் முதலமைச்சர் கோப்பையில் ஐய்யப்பன் என்பவர் மாவட்ட அளவில் முதலிடம் பிடித்துள்ளார்.தமிழ்நாடு அரசு நடத்திய பள்ளி கல்வி அளவிலான போட்டியில் 14, 16, 19வயது பிரிவிலும் போட்டியில் ஆண்கள் பிரிவில் கணேஷ், பெண்கள் பிரிவில் பிரதீபா ஆகியோர் முதலிடம் பிடித்துள்ளனர்.மற்றும் மாணவர்கள். சிலம்பம் சங்கத்தின் மூலமாக நடத்திய போட்டிகளிலும் மாநில,தேசிய அளவில் முதல் மூன்று இடத்தை பிடித்துள்ளனர். வீர விளையாட்டை தவிர்த்து கயிறு ஏறும் கலை, மல்லர் கம்ப விளையாட்டுகளை கூடுதலாகவும், பல்வேறு வகையான விளையாட்டுகளை கற்றுக் கொண்டு நுாற்றுக்கணக்கான மாணவ, மாணவிகளை உருவாக்கி வருகிறார்.இக்குழுவை நிறுவிய சதீஷ், சூரியகாந்த் ஆகியோர் அனைத்து வகைகளிலும் மாணவர்களுக்கு விளையாட்டில் பயிற்யாளர் சுரேந்தருடன் உதவியாக உள்ளதால் கிராம புற ஏழை மாணவர்கள் எளிதாக கலைகளை கற்றுக் கொள்கின்றனர்.