காங்கேயம் பழைய ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டிடம் அளவீடு
காங்கேயம் பழைய ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டிடத்தை அளவீடு செய்யும் படி நேற்று நடைபெற்றது
காங்கேயம் தாராபுரம் சாலையில் கடந்த ஆண்டு காங்கேயம் ஊராட்சி ஒன்றிய அலுவலக புதிய கட்டிடம் கட்டப்பட்டு திறப்பு விழா நடைபெற்று. தற்போது ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அங்கு செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் காங்கேயம் ஊராட்சி ஒன்றிய அலுவலக பழைய கட்டிடத்தை அதிகாரிகள் காலி செய்ததை அடுத்து வணிக நோக்கத்திற்காக 6 ஆண்டுகளுக்கு என 2023 ஆம் ஆண்டு முதல் 2029 ஆம் ஆண்டு வரை முதல் முதல் வருடத்திற்கு ரூ.1.65 லட்சத்திற்கும் இரண்டாம் மற்றும் மூன்றாம் வருடத்திற்கு ரூ 1.9 லட்சம் வாடகைக்கு விடப்பட்டது. இந்த நிலையில் நிபந்தன்களுக்கு உட்பட்டு பழைய கட்டிடத்தில் சுற்றுச்சுவர் மற்றும் நுழைவாயில் ஆகியவை அகற்றப்பட்டு புதிய கட்டிடங்கள் கட்டப்பட்டதை அடுத்து அரசின் சின்னம் மற்றும் சட்டத்திற்கு புறம்பாக கட்டிடத்தை சேதப்படுத்தியது போன்ற குற்றச்சாட்டுகள் எழுந்தது. இதன் அடிப்படையில் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உத்தரவின் பேரில் சுமார் 657.312 சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட இடத்தை நேற்று காலை நில அளவையர்கள் அளவீடு செய்தனர்