சிவன்மலையில் முதலமைச்சரின் சிறு விளையாட்டு அரங்க கட்டுமான பணிகள் அமைச்சர் ஆய்வு

சிவன்மலையில் முதலமைச்சரின் சிறு விளையாட்டு அரங்க கட்டுமான பணிகள் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் ஆய்வு செய்தார்

Update: 2024-08-23 14:52 GMT
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட சிவன்மலை ஊராட்சியில் புதிதாக கட்டப்பட்டு வரும் முதலமைச்சரின் சிறு விளையாட்டு அரங்க கட்டிடப் பணிகளை திருப்பூர் மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் தலைமையில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் ஆய்வு மேற்கொண்டார். காங்கேயம் சட்டமன்றத் தொகுதியில் சிவன்மலை ஊராட்சியில் 6.56 ஏக்கர் நிலப்பரப்பில் முதலமைச்சர் சிறு விளையாட்டு அரங்கம் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டது. இந்த அரங்கத்தில் 400 மீட்டர் ஓடுதள பாதை, கால்பந்து, கையுந்து பந்து, கூடைப்பந்து, கபடி ஆகிய விளையாட்டுகளுக்கு மைதானம் மற்றும் பார்வையாளர் அமரும் இருக்கைகள், அலுவலகம், பொருட்கள் பாதுகாப்பு அறை, விளையாட்டு வீரர் வீராங்கனைகள் உடைமாற்றும் அறை, கழிவறை ஆகிய வசதிகளுடன் சிறு விளையாட்டு அரங்கம் அமைக்கப்படும் வரைபடத்தையும் அதன் திட்டத்தையும் கட்டிட பொறியாளரிடம் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் ஆகியோர் கேட்டறிந்தனர். இந்நிகழ்வில் காங்கேயம் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் மகேஷ் குமார், துணைத் தலைவர் ஜீவிதா ஜவகர், நகர செயலாளர் வசந்தம் ஐயப்பன், தெற்கு ஒன்றிய செயலாளர் சிவானந்தம், சிவன்மலை ஊராட்சி மன்ற தலைவர் துரைசாமி, துணைத்தலைவர் சண்முகம், தலைமை பொதுக்குழு உறுப்பினர் கார்த்திகேயன் ஆகியோர் உடன் இருந்தனர்.

Similar News