தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் நிறுவனத் தலைவர் விஜயகாந்தின் 72வது பிறந்தநாள் வறுமை ஒழிப்பு தினமாக கட்சியினர் கொண்டாடி வருகின்றனர்.அந்த வகையில் இன்று நெல்லை மாநகர தேமுதிகவினர் பாளையங்கோட்டையில் உள்ள பார்வையற்றோர் இல்லத்தில் காலை உணவு வழங்கினர். இதில் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட அவை தலைவர் ஜெயச்சந்திரன் கலந்துகொண்டு உணவினை வழங்கினார்.இந்த நிகழ்ச்சியில் தேமுதிக நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.