திருப்பத்தூரில் நலத்திட்ட முகாமில் மாவட்ட ஆட்சியர் பங்கேப்பு
நலத்திட்ட உதவிகள் வழங்கும் மக்கள் தொடர்பு முகாம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது.
திருப்பத்தூர் மாவட்டம் மத்திய மாநில அரசின் நலத்திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் மக்கள் தொடர்பு முகாம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது. திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி வட்டம் வளையாம்பட்டு பகுதியில் மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பல்துறை சார்ந்த அரசு அலுவலர்கள் பங்கு பெற்று மத்திய மாநில அரசின் மக்கள் நலத்திட்டங்கள் குறித்து பொதுமக்கள் அறியும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்தினர் மற்றும் சுகாதாரத்துறை வேளாண்துறை ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் அரங்கங்கள் அமைக்கப்பட்டு இருந்தது. பல்வேறு துறைகளின் சார்பில் அமைக்கப்பட்டிருந்த அரங்கங்களை மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் பார்வையிட்டார். அதனைத் தொடர்ந்து வருவாய்த்துறை வேளாண்துறை தோட்டக்கலைத்துறை மக்கள் நல்வாழ்வுத்துறை மாற்றுத்திறனாளி நலத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சார்பில் 145 பயனாளிகளுக்கு ரூபாய் 63 லட்சத்து 93 ஆயிரத்து 875 ரூபாய் மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் வழங்கினார்.