திருநெல்வேலி மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் பகுதியில் உள்ள பசுக்கிடைவிளை பகுதியை சேர்ந்த மாணவர் ஆஷிக் மீரான் (13) அங்குள்ள தனியார் பள்ளியில் 8ஆம் வகுப்பு படித்து வந்தார். மாணவர் ஆஷிக் மீரான் நேற்று பள்ளிக்கூடம் முடித்து வந்து மாலை வீட்டு மாடியில் உள்ள பாத்ரூமில் குளிக்க சென்றுள்ளார்.இவர் நீண்ட நேரமாகியும் வெளியே வராததால் அவரது தாய் பாத்ரூம் சென்று பார்த்தபோது அவர் இறந்து கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த விகேபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.மேலும் மாணவனின் மர்ம மரணம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மாணவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.