டெங்கு காய்ச்சல் அறிகுறி தடுப்பு பணிகள் தீவிரம்
ஆவடி மாநகராட்சியில் 5 பேர் டெங்கு அறிகுறியுடன் சிகிச்சை மாநகர சுகாதார குழுவினர் பட்டாபிராம் பகுதியில் தடுப்புபணிகள் தீவீரம்
ஆவடி மாநகராட்சியில் 5 பேர் டெங்கு அறிகுறியுடன் சிகிச்சை மாநகர சுகாதார குழுவினர் பட்டாபிராம் பகுதியில் தடுப்புபணிகள் தீவீரம் திருவள்ளூர் மாவட்டம் ஆவடி மாநகராட்சி க்கு உட்பட்ட பட்டாபிராம் சேக்கடு கோபாலபுரம், பகுதியில் 5 பேர் டெங்கு காய்ச்சல் அறிகுறியுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர், 8 வயது சிறுவன், ஒரே குடும்பத்தை சேர்ந்த தந்தை மற்றும் இரு மகள்கள் மற்றும் கோபாலபுரம் மேற்கு, 3 வது தெருவில் வசிக்கும் 30 வயது இளம் பெண் உள்ளிட்ட 5 பேர் டெங்கு காய்ச்சல் அறிகுறிகளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர், இதனை அடுத்து மாநகராட்சி சுகாதாரத் துறை சார்பில் சம்பந்தப்பட்ட பகுதியில் புகை தெளிப்பான், மற்றும் கிருமி நாசினி தெளிக்கும் பணியில் ஈடுபட்டு டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் தீவிர படுத்தியுள்ளனர்.