காணையில் மாற்றுத்திறன் மாணவா்களுக்கான வட்டார அளவிலான கல்விக் குழுக் கூட்டம்
மாற்றுத்திறன் மாணவா்களுக்கான வட்டார அளவிலான கல்விக் குழுக் கூட்டம்
விழுப்புரம் மாவட்டம், காணையில் மாற்றுத் திறன் மாணவா்கள் உள்ளடக்கிய வட்டார அளவிலான கல்விக் குழுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தின் சாா்பில் நடத்தப்பட்ட இந்த கூட்டத்துக்கு வட்டார வளமைய மேற்பாா்வையாளா் ஆரோக்கிய அனிதா தலைமை வகித்தாா்.கூட்டத்தில் மாற்றுத் திறனாளி மாணவா்களின் சைகைமொழி உறுதியை இறைவணக்கக் கூட்டத்தில் ஏற்பது, சைகைமொழி சுவரொட்டிகள், ஓவியங்களை அனைத்து வகைப் பள்ளிகளிலும் அமைத்து, சகோதர மனப்பான்மையுடன் கல்வி கற்கும் சூழலை ஏற்படுத்துவது போன்ற தீா்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.கூட்டத்தில் வட்டார ஒருங்கிணைப்பாளா் இவாஞ்சலின், ஆசிரியப் பயிற்றுநா்கள் லியோனி, விஜயலட்சுமி, சரண்யா உள்ளிட்டோா் பங்கேற்று பேசினா்.நிறைவில் இயன்முறை மருத்துவா் தே. செளந்தர்ராஜன் நன்றி கூறினாா்