திண்டிவனம் அருகே அங்கன்வாடி மையத்தில் கிருஷ்ண ஜெயந்தி விழா

அங்கன்வாடி மையத்தில் கிருஷ்ண ஜெயந்தி விழா

Update: 2024-08-24 16:36 GMT
விழுப்புரம் மாவட்டத்தில் ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சித் திட்டத்தின் கீழ் அங்கன்வாடி மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த மையங்களில் குழந்தைகளுக்கு முன்பருவக் கல்வி வழங்கப்பட்டு வருகிறது. மேலும் அவா்களுக்கான சத்தான உணவு வகைகளும் வழங்கப்பட்டு வருகின்றன. இதைத் தவிர குழந்தைகளின் கற்றல் திறன் மேம்பாட்டுக்காகவும் பல்வேறு நிகழ்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.இதைத் தொடா்ந்து திண்டிவனம் ஜெயபுரத்திலுள்ள அங்கன்வாடி மையத்தில் கிருஷ்ண ஜெயந்தி விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி இந்த மையத்தில் முன்பருவக் கல்விப் பயிலும் 25-க்கும் மேற்பட்ட குழந்தைகள் கிருஷ்ணா்-ராதை வேடமிட்டு வந்தனா்.இந்த நிகழ்வில் குழந்தை வளா்ச்சித் திட்ட அலுவலா் க.மனோசித்ரா பங்கேற்று, கிருஷ்ணா்-ராதை வேடமிட்டு வந்த குழந்தைகளுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தாா். அங்கன்வாடி மையப் பணியாளா்கள், குழந்தைகளின் பெற்றோா் உள்ளிட்டோா் நிகழ்வில் பங்கேற்றனா்.

Similar News