அரசின் பல்வேறு கட்டுப்பாடுகள் காரணமாக இந்த ஆண்டு விநாயகர் சிலை விற்பனை மந்தம் என தயாரிப்பாளர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.,

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பொள்ளாச்சியில் விநாயகர் சிலைகள் தயாரிப்பு பணிகள் மும்முரம் - ஆனால் அரசின் பல்வேறு கட்டுப்பாடுகள் காரணமாக இந்த ஆண்டு விநாயகர் சிலை விற்பனை மந்தம் என தயாரிப்பாளர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.,

Update: 2024-08-25 04:49 GMT
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பொள்ளாச்சியில் விநாயகர் சிலைகள் தயாரிப்பு பணிகள் மும்முரம் - ஆனால் அரசின் பல்வேறு கட்டுப்பாடுகள் காரணமாக இந்த ஆண்டு விநாயகர் சிலை விற்பனை மந்தம் என தயாரிப்பாளர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்., பொள்ளாச்சி.,ஆகஸ்ட்.,25 வருகிற செப்டம்பர் 7.ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது., இதனால் இந்து அமைப்பினர் மற்றும் பொதுமக்கள் விநாயகர் சிலையை வீட்டில் வைத்தும் பொது இடங்களில் வைத்தும் வழிபாடு செய்து ஆற்றில் கரைத்து வருவது வழக்கம்., இந்தாண்டுக்கான விநாயகர் சதுர்த்தி விழா வரும் செப்டம்பர் 7.ஆம் தேதி கொண்டாடப்படுவதால் பொள்ளாச்சி அருகே உள்ள ஊஞ்சாவேலம்பட்டியில் விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது., இதில் மூன்று அடி முதல் 10 அடி வரை தயாரிக்கப்படும் விநாயகர் சிலைகள் பல்வேறு வடிவங்களில் பல வண்ணங்களில் கம்பீரமாக காட்சியளிக்கிறது., தமிழக அரசு மற்றும் மாசு கட்டுப்பாட்டு துறை விதிக்கப்பட்டுள்ள சுற்றுச்சூழலை பாதிக்காத இயற்கை உணவு வகையில் உள்ள கிழங்கு மாவு மற்றும் காகித கூழ் மற்றும் எளிதில் தண்ணீரில் கரையக்கூடிய வண்ணங்களை தீட்டி விநாயகர் சிலை தயாரிக்கப்படுவதாக உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர்., ஆனால் ஆண்டுதோறும் பத்து மாதங்களாக தயாரிக்கப்படும் விநாயகர் சிலைகள் ஒரு மாதத்திற்கு முன்பே விறுவிறுப்பாக விற்பனையாகும் என்றும், ஆனால் இந்த ஆண்டு விற்பனை மந்தமாகவே காணப்படுவதாக தயாரிப்பாளர்கள் வேதனையுடன் தெரிவித்து வருகின்றனர்., தமிழக அரசு, காவல்துறை, மாசு கட்டுப்பாட்டு துறையின் கடும் கட்டுப்பாடுகளால் பொதுமக்கள் விநாயகர் சிலை வாங்க இந்த ஆண்டு தயக்கம் காட்டுவதாக தெரிவிக்கும் சிலை தயாரிப்பாளர்கள், ஏற்கனவே ஆர்டர் முறையில் புக்கிங் செய்து சென்ற பல விநாயகர் சிலைகளையையும் கேன்சல் செய்து வருவதாக கடும் வேதனையுடன் தெரிவித்தனர்., எனவே கட்டுப்பாடுகளை குறைத்தால் மட்டுமே இந்தாண்டு விநாயகர் சிலையை வாங்க மக்கள் ஆர்வம் காட்டுவார்கள் என தயாரிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்., பேட்டி.,பிரவீன் குமார், சிலை தயாரிப்பாளர் பொள்ளாச்சி.,

Similar News