விசாயிகளுக்கு உழவர் உற்பத்தியாளரகள் மேலாண்மை சார்பில் பயிற்சி.
பரமத்தி ஒன்றியத்தில் விசாயிகளுக்கு உழவர் உற்பத்தியாளரகள் மேலாண்மை சார்பில் பயிற்சியளிக்கப்பட்டது.
பரமத்திவேலூர், ஆக.25- நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் தாலுகா, பரமத்தி ஊராட்சி ஒன்றியம் கருங்கல்பட்டியில் உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் தமிழ்செல்வன் கலந்து கொண்டு உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் அமைப்பது, குழு உறுப்பினர்கள் ஒற்றுமையாக செயல்படுதல், குழு உறுப்பினர்களுக்கு மாதாந்திர கூட்ட நடைமுறைகள், குழுவில் ஏற்படும் பிரச்சனைகள் மற்றும் அவற்றை சரி செய்யும் முறைகள், அரசின் மூலம் பெறும் மானியங்கள். சட்ட விதிகளின்படி கணக்குகள் பராமரிக்கும் முறைகள், மதிப்பு கூட்டி விற்பனை செய்யும் வழிமுறைகள், சிறுதானியம் மற்றும் பாரம்பரிய ரகங்கள் விதை விநியோகம் செய்தல், உரிமம் பெற்று அங்கீகரிக்கப்பட்ட பெயரில் விற்பனை செய்வதால் கிடைக்கும் பயன்கள் ஆகியவை குறித்து விவசாயிகளுக்கு விளக்கிக் கூறினார். பரமத்தி வட்டார துணை வேளாண்மை அலுவலர் குப்புசாமி, உதவி வேளாண்மை அலுவலர் பாபு , அட்மா திட்ட வட்டார தொழில்நுட்ப மேலாளர் பன்னீர்செல்வம் அட்மா திட்ட செயல்பாடுகள், உழவன் செயலி ஆகியவை குறித்து விளக்கி கூறினார். பயிற்சிக்கான ஏற்பாடுகளை உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் ரவீனா, ஜோதிமணி ஆகியோர் செய்திருந்தனர்.