கலைஞரின் நூற்றாண்டு தினத்தை முன்னிட்டு பேச்சுப்போட்டி

திருவள்ளூரில் கலைஞர் நூற்றாண்டு பேச்சுப் போட்டியில் பேசி அசத்திய பொதட்டூர்பேட்டை நெசவாளரின் மகள் கயல்விழிக்கு கைத்தறி துணி நூல் துறை அமைச்சர் ஆர் காந்தி பாராட்டி பரிசளித்து கௌரவித்தார்

Update: 2024-08-25 08:49 GMT
திருவள்ளூரில் கலைஞர் நூற்றாண்டு பேச்சுப் போட்டியில் பேசி அசத்திய பொதட்டூர்பேட்டை நெசவாளரின் மகள் கயல்விழிக்கு கைத்தறி துணி நூல் துறை அமைச்சர் ஆர் காந்தி பாராட்டி பரிசளித்து கௌரவித்தார். திருவள்ளூர் மேற்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் கலைஞர் நூற்றாண்டு தினத்தை முன்னிட்டு மாநில இளைஞரணி துணைச் செயலாளர் மண்டல பொறுப்பாளர் அப்துல் மாலிக் முன்னிலையில் கலைஞர் நூற்றாண்டு பேச்சுப்போட்டி திருவள்ளூரில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது இதில் திருத்தணி பள்ளிப்பட்டு பொதட்டூர்பேட்டை ஆர்கே பேட்டை திருவாலங்காடு கடம்பத்தூர் சுற்றுவட்டாரங்களில் இருந்து பள்ளி கல்லூரி மாணவ மாணவியர்கள் பங்கேற்றனர். என்றென்றும் பெரியார் ஏன்?. அண்ணா கண்ட மாநில சுயாட்சி. கலைஞரின் தொலைநோக்குப் பார்வை. சமூகநீதி காவலர் கலைஞர். ஹிந்தி திணிப்பை என்றும் எதிர்ப்போம். தமிழ்நாட்டு குடும்பங்களில் திமுக. பேசி வென்ற இயக்கம். திராவிட மாடல் முதல்வர் மு க ஸ்டாலின் என பத்து தலைப்புகளில் பேச்சுப்போட்டி நடைபெற்றது இதில் பங்கேற்ற அதிகம் பேர் இந்தி திணிப்பை என்றும் எதிர்ப்போம் என்று பேசி திமுகவினரின் கைத்தட்டல்களையும் பாராட்டுக்களையும் பெற்றனர். இதில் சிறப்பு அழைப்பாளராக கைத்தறி துணி நூல் துறை அமைச்சர் ராணிப்பேட்டை மாவட்ட கழக செயலாளர் ஆர் காந்தி பங்கேற்றார். இதில் நடுவர்களாக நாஞ்சில் சம்பத் தமிழ் மகன் சிங்கை பிரபாகரன் ஆகியோர் முன்னின்று நடத்திய பேச்சுப் போட்டியில் சிறப்பாக உரையாற்றி ரொக்க பரிசு பாராட்டு சான்றிதழ் உள்ளிட்டவைகளை வழங்கி இதில் சட்டமன்ற உறுப்பினர்கள் சந்திரன் ராஜேந்திரன் மாவட்ட அவைத்தலைவர் திராவிட பக்தன் மாவட்ட அமைப்பாளர் கிரண் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பேச்சுப் போட்டியில் பொதட்டூர்பேட்டை விநாயகம் என்ற நெசவாளரின் மகள் அரசு பெண்கள் மேல்நிலை பள்ளி மாணவி கயல்விழியை பாராட்டி கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் பரிசளித்து கௌரவித்தார் அதேபோன்று பேச்சுப்போட்டியில் சிறப்பாக பேசிய மற்ற பள்ளிகளுக்கு மாணவ மாணவியர்களுக்கும் அமைச்சர் சட்டமன்ற உறுப்பினர்கள் இணைந்து சால்வை அணிவித்து பாராட்டு கௌரவித்தனர்

Similar News