சங்ககிரியில் மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் பிறந்தநாள் விழா கொண்டாட்டம்

சங்ககிரி: மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் பிறந்தநாள் விழா தேமுதிக சார்பில் கேக் வெட்டி, இனிப்பு வழங்கி உற்சாககொண்டாட்டம்....

Update: 2024-08-25 08:54 GMT
சேலம் மாவட்டம் சங்ககிரியில் தேமுதிக நிறுவன தலைவர் மறைந்த விஜயகாந்த்தின் 72 வது பிறந்தநாளை முன்னிட்டு தேமுதிக சார்பில் பட்டாசு வெடித்து கட்சி கொடி ஏற்றி கேக் வெட்டி இனிப்புகள் வழங்கி உற்சாக கொண்டாட்டம்.... தேமுதிக நிறுவன தலைவரும் தமிழக முன்னாள் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மறைந்த விஜயகாந்த்தின் 72 வது பிறந்தநாள் விழா தமிழக முழுவதும் தேமுதிக சார்பில் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக சேலம் மாவட்டம் சங்ககிரி அருகேயுள்ள கிடையூர் மேட்டூர் பகுதியில் சேலம் மேற்கு மாவட்ட துணை செயலாளர் ரமேஷ் தலைமையில் சேலம் மேற்கு மாவட்ட செயலாளர் சுரேஷ்பாபு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு தேமுதிக கட்சி கொடியேற்றி கேக் வெட்டி, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடி மகிழ்ந்தனர். . அப்போது மாவட்ட அவைத் தலைவர் செல்வராஜ் ,செயற்குழு உறுப்பினர்கள் வி.சசிகுமார், சுந்தரராஜன், சங்ககிரி கிழக்கு ஒன்றிய செயலாளர் விஜயபூபதி, பொருளாளர் மனோகரன், கிளைச் செயலாளர்கள் ரங்கராஜ், குமரேசன் மற்றும் நிர்வாகிகள் மூர்த்தி, வைதீஸ், பிரகாஷ், பரத் மகளிரணி நிர்வாகிகள் உஷா,செல்வி,உமாபதி, விஜயா,லதா,கீதா, தங்கமணி,சந்திரா, பெருமாயி கிருஷ்ணவேணி உட்பட தேமுதிக நிர்வாகிகள் பொதுமக்கள் ஏராளமானோர் இதில் கொண்டனர்.

Similar News