ஆடிப்பூரவிழா சங்ககிரி ஆதிபராசக்தி வாரவழிபாட்டு மன்றத்தின் சார்பில் விமர்சையாக நடைபெற்றது....
சங்ககிரி ஆதிபராசக்தி வாரவழிபாட்டு மன்றத்தின் சார்பில் சங்ககிரியில் ஆடிப்பூரவிழா
சேலம் மாவட்டம், சங்ககிரி ஆதிபராசக்தி வார வழிபாட்டு மன்றத்தின் சார்பில் ஆடிப்பூர விழா சங்ககிரியில் நடைபெற்றது. சங்ககிரியில் உள்ள மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி வாரவழிபாட்டு மன்றத்தின் சார்பில் மழை பெய்ய வேண்டியும், பருவமழை உரிய காலங்களில் பெய்து விவசாயம் செழிப்படைய வேண்டியும், இயற்கை சீற்றங்கள் தணிய வேண்டியும், உலகம் அமைதி பெற வேண்டியும் சங்ககிரி மலையடிவராத்தில் உள்ள அருள்மிகு எல்லையம்மன் கோயிலிருந்து கஞ்சிகலயங்கள் எடுத்துக்கொண்டும், கைகளில் தீ சட்டிகளை எடுத்துக்கொண்டும், அலகு குத்தியும் உடனமர் சோமேஸ்வரர் ஆலயத்திலிருந்து திரளான செவ்வாடை பக்தர்கள் தலையில் சுமந்த படி சந்தைபேட்டை, புதிய எடப்பாடி சாலை பவானி பிரதான சாலை வழியாக வழிபாட்டு மன்றத்தினை அடைந்தது. பின்னர் கஞ்சி வார்த்தல் நிகழ்ச்சி முடிவடைந்த பின்னர் அம்மனுக்கு பால் அபிஷேகம் நடைபெற்றதயைடுத்து சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்து மந்திரங்கள் படித்த பின்னர் பூஜைகள் நடைபெற்றது. இதில் ஏராளமான செவ்வாடை பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிப்பட்டுச் சென்றனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.