தேனி உழவர் சந்தை அருகில் 120 ஏக்கர் பரப்பிலானது மீறு சமுத்திரம் கண்மாய். இந்தக் குளத்தில் நீர் நிரம்புவதால் தேனியில் நிலத்தடி நீர் மட்டும் உயர்ந்து இப்பகுதியில் ஆழ்துளை கிணறுகள் பயனடைகின்றன. சில ஆண்டுகளாக இந்த கண்மாய் ஆகாய தாமரைகள் செடிகள் ஆக்கிரமித்து நீரே தெரியாத வகையில் பச்சை பசேல் என காட்சியளிக்கின்றன இந்த ஆகாயத்தாமரையை அகற்றி தூர்வார வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்