சினிமாவில் மார்க்கெட் இறந்தவர்கள் கட்சி துவங்கி கொடியை அறிமுகம் செய்கின்றனர் : அமைச்சர்
சினிமாவில் மார்க்கெட் இழந்தவர்கள் கட்சி துவங்கி கொடியை அறிமுகம் செய்கின்றனர் நடிகர் விஜய் கட்சிக்கொடியை கிண்டல் செய்து முன்னாள் அமைச்சர் திருவள்ளூர் மத்திய மாவட்ட கழக செயலாளர் ஆவடி சாமு நாசர் பேச்சு. நடிகர் விஜயையும் தவெக கொடியையையும் தாக்கி பேசி திமுக எம்எல்ஏக்கள் இருவர் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர்
சினிமாவில் மார்க்கெட் இழந்தவர்கள் கட்சி துவங்கி கொடியை அறிமுகம் செய்கின்றனர் நடிகர் விஜய் கட்சிக்கொடியை கிண்டல் செய்து முன்னாள் அமைச்சர் திருவள்ளூர் மத்திய மாவட்ட கழக செயலாளர் ஆவடி சாமு நாசர் பேச்சு. நடிகர் விஜயையும் தவெக கொடியையையும் தாக்கி பேசி திமுக எம் எல் ஏக்கள் இருவர் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர். திருவள்ளூர் மத்திய மாவட்ட திருவள்ளூர் வடக்கு ஒன்றிய பொது உறுப்பினர்கள் கூட்டம் திருவள்ளூர் அருகே உள்ள ஏ கே மஹால் திருமண மண்டபத்தில் இன்று நடைபெற்றது முன்னாள் பால்வளத்துறை அமைச்சர் ஆவடி சாமு நாசர் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் பூவிருந்தவல்லி சட்டமன்ற உறுப்பினர் முன்னாள் எம்பி ஆ. கிருஷ்ணசாமி முன்னாள் அமைச்சர் சாமு நாசர் ஆகிய இருவரும் ஆலோசனைக்கூட்டத்தில் பேசுகையில் நடிகர் விஜய் சீமான் ஆகிய இருவரது கட்சிகள் கொள்கை இல்லா கட்சிகள் என்றும் சினிமா வாய்ப்பு குறைந்ததும் முதல்வராக பார்க்கின்றா ர்கள் என்றும் நடிகைகள் சினிமா வாய்ப்பு குறைந்ததும் சின்னத்திரைக்கு சென்று விடுவதும் அங்கு வாய்ப்பு குறைந்ததும் மஞ்சள் தூள் மசாலா விளம்பரங்களில் தோன்றுவது போல அரசியலுக்கு வந்து முதல்வராகி விட பார்க்கின்றனர் தவெக தலைவர் நடிகர் விஜயையும், சீமானையும் தாக்கி பேசினர். சினிமாவில் இருந்து நேரடியாக முதலமைச்சர் ஆகிவிடலாம் என்று பார்க்கின்றனர் அதற்கு எவ்வளவு தியாகம் போராட்டங்களை செய்திருக்க வேண்டும் இவற்றையெல்லாம் கடந்து வந்தவர் முதலமைச்சர் மு க ஸ்டாலின் என்று முன்னாள் அமைச்சர் நாசர் பேசினார்.