செஞ்சி பகுதியில் சங்கராபரணி ஆற்றில் தடுப்பணை கட்டுவது எப்போது
சங்கராபரணி ஆற்றில் தடுப்பணை கட்டுவது எப்போது
விழுப்புரம் மாவட்டத்தில் 70 சதவீதம் விவசாயம் செய்யும் மக்கள் உள்ள பகுதியாக செஞ்சி தாலுகா உள்ளது. இந்த பகுதியில் உள்ள ஏரி, குளங்களுக்கு தேவையான தண்ணீரை செஞ்சி பகுதியில் பெய்யும் மழையில் இருந்தே பெறப்படுகிறது.செஞ்சி அடுத்த பாக்கம் மலைக் காடுகளில் துவங்கும் வராகநதியே செஞ்சி பகுதிக்கான தண்ணீர் தேவையை நிறைவு செய்து வருகிறது.வராக நதி செவலபுரை அருகே சங்கராபரணி ஆற்றில் இணைகிறது. சங்கராபரணி ஆறு வீடூர் அணையை கடந்து புதுச்சேரி வரை சென்று கடலில் கலக்கிறது.தென்மேற்கு பருவமழை காலத்திலேயே பெரும்பான்மையான ஏரிகளுக்கு 50 சதவீதம் தண்ணீர் வந்து விட்டது. வடகிழக்கு பருவ மழையின் போது மிக விரைவில் ஏரிகள் நிறைந்து மழை நீர் வீணாக கடலில் கலக்கும் நிலையே ஏற்படும்.ஒவ்வொரு ஆண்டும் இது போன்ற காட்டாற்று வெள்ளம் வீணாவதை தடுக்க தமிழக அரசு சங்கராபரணி ஆற்றில் தடுப்பணை கட்ட நிதி ஒதுக்க வேண்டும் என பொது மக்களும், விவசாயிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.