நந்தன் கால்வாயில் தண்ணீர் செல்வதில் ஏற்பட்டுள்ள தடை அகற்ற கோரிக்கை

கால்வாயில் தண்ணீர் செல்வதில் ஏற்பட்டுள்ள தடை அகற்ற கோரிக்கை

Update: 2024-08-26 03:25 GMT
நந்தன் கால்வாய் பாதுகாப்பு சங்கம் சார்பில் கால்வாய் துவங்கும் கீரனுார் அணைக்கட்டில் இருந்து சங்க செயலாளர் வெற்றி தமிழ் செல்வன் தலைமையில் ஒரு குழுவும், கால்வாய் முடிவடையும் பனமலை ஏரியில் இருந்து சங்கர் தலைமையில் ஒரு குழுவும் கால்வாயில் உள்ள தடைகள், நீர் வரத்து குறித்து கள ஆய்வு செய்தனர். இரண்டு குழுக்களும் சோ.குப்பம் பொத்தேரி கரையில் பயணத்தை முடித்தனர். அங்கு நடந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு கிருஷ்ணன் தலைமை தாங்கினார். கார்வண்ணன், வேல்முருகன், சீனுவாசன், ஸ்ரீதர், முருகன், தில்லைராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சங்க தலைவர் அன்பழகன் வரவேற்றார். தென்பெண்ணை-பாலாறு நதிகள் இணைப்பு திட்டத்தை தமிழக அரசு விரைந்து செயல்படுத்த வேண்டும், ஒவ்வொரு மாதமும் கலந்தாய்வு கூட்டம் நடத்தவும், அரசின் கவனத்தை ஈர்க்க போராட்டம் நடத்தவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Similar News