மனநலம் பாதிக்கப்பட்டு பொதுமக்களுக்கு இடையூறாக இருந்த இளைஞரை மீட்டு சிகிச்சைக்காக உதவிய காவல்துறை
காவல்துறை
தேனி அல்லிநகரம் பேருந்து நிறுத்தம் அருகே சுமார் 32 வயது மதிக்கத்தக்க ஆண் திருமணமாகாத நிலையில் மது போதைக்கு அடிமையாகி மனநலம் பாதிக்கப்பட்டு பொதுமக்களுக்கு இடையூறு செய்து வந்தார். மேலும் அல்லிநகரம் காவல் ஆய்வாளர் உத்தரவின் பேரில் ம.சுப்புலாபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருந்தாளுநர் ரஞ்சித்குமார் இளைஞரை மீட்டு அவரது எதிர்கால நலன் கருதி பெரியகுளம் அரசு தலைமை மனநல சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைக்காக சேர்த்து விட்டார்.இந்த நிகழ்வு பொதுமக்களிடையே மிகவும் பாராட்டினை பெற்றது.