திமுக பொது உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டம் எம் பி, எம் எல் ஏ பங்கேற்பு
திமுக பொது உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டம் எம் பி, எம் எல் ஏ பங்கேற்பு
செங்கல்பட்டு மாவட்டம்,மதுராந்தகம் நகர திமுக மற்றும் இலத்தூர் தெற்கு ஒன்றிய திமுக சார்பில் நகர செயலாளர் குமார், ஒன்றிய செயலாளர் எம்.எஸ்.பாபு ஆகியோர் தலைமையில் பொது உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டம் மதுராந்தகம் செய்யூர் ஆகிய இரண்டு இடங்களில் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக காஞ்சி தெற்கு மாவட்ட செயலர் க. சுந்தர் எம்எல்ஏ, காஞ்சிபுரம் பாராளுமன்ற உறுப்பினர் க. செல்வம், ஆகியோர் கலந்து கொண்டு கட்சியின் வளர்ச்சிப் பணிகள் குறித்தும் புதிய உறுப்பினர்கள் சேர்ப்பது குறித்தும், தொகுதிகள் தோறும் கலைஞரின் உருவ சிலை வைப்பது குறித்தும், வரும் சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி 200 தொகுதிக்கு மேல் வெற்றி பெறுவதற்கு அயராது உழைப்பது குறித்து ஆலோசனைகள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் நகர மன்ற தலைவர் மலர்விழி, மாவட்ட கவுன்சிலர் ஜெயலக்ஷ்மி மகேந்திரன் உள்ளிட்ட ஒன்றிய நகர அணிகளின் அமைப்பாளர்கள்,கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.,