ஸ்ரீ கிருஷ்ண ஜென்மாஷ்டமி விழா சிறப்பு பூஜை
கிருஷ்ண ஜெயந்தி விழாவையொட்டி மண்டபத்தில் பெண்கள் குழந்தைகள் பஜனைகள் பாடி ஆடி மகிழ்ந்தனர்.
பல்லடத்தில் ஸ்ரீ கிருஷ்ண ஜென்மாஷ்டமி விழா சிறப்பு பூஜை. கிருஷ்ண ஜெயந்தி விழா நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது பல்லடம் பகுதியில் கிருஷ்ண ஜெயந்தி விழாவையொட்டி கோயில்களில் பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது. பல்லடம் அருகே அருள்புரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் ஸ்ரீகிருஷ்ண ஜென்மாஷ்டமி விழா இன்று நடைபெற்றது. இதில் தவத்திரு பக்தி வினோத சுவாமி மகராஜ் ஆன்மிக சொற்பொழிவு ஆற்றினார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினர். தனியார் மண்டபத்தில் நடைபெற்ற ஸ்ரீகிருஷ்ண ஜென்ம அஷ்டமி விழாவில் திருப்பூர் மாவட்ட செயலாளர் மற்றும் எம்எல்ஏவான செல்வராஜ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். மேலும் திமுகவை சேர்ந்த ஒன்றிய தலைவர்களான சோமசுந்தரம், கிருஷ்ணமூர்த்தி மற்றும் பல்லடம் ஒன்றிய தலைவர் தேன்மொழி பூஜையில் கலந்து கொண்டனர். கிருஷ்ண ஜெயந்தி விழாவையொட்டி மண்டபத்தில் பெண்கள் குழந்தைகள் பஜனைகள் பாடி ஆடி மகிழ்ந்தனர். மேலும் குழந்தைகளுக்கு கிருஷ்ணன், ராதை போன்ற வேடமிட்டு கலந்து கொண்டனர். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். அதனைத்தொடர்ந்து அனைவருக்கும் அன்னதானம் மற்றும் பிரசாதங்கள் வழங்கப்பட்டன.