விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு சார்பில் கிருஷ்ண ஜெயந்தி விழா

பழனி பெரியநாயகி அம்மன் கோவில் அருகே விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு சார்பில் நடைபெற்ற விழாவில் நூற்றுக்கணக்கான குழந்தைகள் கிருஷ்ணர் மற்றும் ராதை வேடமிட்டு கலந்துகொண்டனர்.

Update: 2024-08-27 03:26 GMT
கோகுலாஷ்டமியை முன்னிட்டு நாடுமுழுவதும் கிருஷ்ண ஜெயந்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதன்படி திண்டுக்கல் மாவட்டம் பழனியில் விஷ்வ ஹிந்து பரிஷத் சார்பில் கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது‌. பழனி பெரியநாயகி அம்மன் கோவில் அருகே உள்ள தேரடி திடலில் நடைபெற்ற விழாவில் ஶ்ரீகிருஷ்ணர் மற்றும் ராதை வேடமிட்டு நூற்றுக்கணக்கான குழந்தைகள் கலந்துகொண்டனர். கிருஷ்ணர் வேடமிட்டு கலந்துகொண்ட குழந்தைகளின் பெயர்களை குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிர்ஷ்ட கிருஷ்ணனுக்கு 10ஆயிரம் ரூபாயும், அதிர்ஷ்ட ராதைக்கு 5ஆயிரம் ரூபாயும் பரிசாக வழங்கப்பட்டது. முன்னதாக கோபூஜை நடத்தப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் திருமடங்கள் மற்றும் திருக்கோவில்கள் பாதுகாப்பு குழு மாநில அமைப்பாளர் செந்தில்குமார் தலைமையில் நடைபெற்ற விழாவில் ஆயிரத்திற்கும் பேற்பட்டோர் பங்கேற்றனர்.

Similar News