விருத்தாசலத்தில் திராவிடர் கழகம் சார்பில் திமுக அரசின் வரலாற்று சாதனைகள் விளக்க பொதுக்கூட்டம்
மாவட்ட செயலாளர் வெற்றிச்செல்வன் தலைமையில் நடந்தது
திராவிடர் கழகம் சார்பில் தந்தை பெரியார் 51 ஆம் ஆண்டு நினைவு நாள், வைக்கம் வெற்றி முழக்கம் மற்றும் தமிழ்நாடு, கேரள முதலமைச்சர்களுக்கு நன்றி மற்றும் திராவிட மாடல் அரசின் வரலாற்று சாதனைகள் விளக்கப் பொதுக்கூட்டம் விருத்தாசலம் பாலக்கரையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு மாவட்டச் செயலாளர் வெற்றிச்செல்வன் தலைமை தாங்கினார். நகரத் தலைவர் பசுபதி அனைவரையும் வரவேற்றார். மாவட்டத் தலைவர் இளங்கோவன், பொதுக்குழு உறுப்பினர்கள் ராசமாணிக்கம், பாலமுருகன், மாவட்ட துணைத் தலைவர் பன்னீர்செல்வம், மாவட்ட துணை செயலாளர் பழனிச்சாமி, மாவட்ட இளைஞரணி தலைவர் சிலம்பரசன், நகரச் செயலாளர் முகமது பஷீர், கம்மாபுரம் ஒன்றிய செயலாளர் தமிழ்ச்செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். திராவிடர் கழகம் காப்பாளர் இளவரசன், தலைமை கழக அமைப்பாளர் இளந்திரையன் ஆகியோர் தொடக்க உரை நிகழ்த்தினர். பொதுச்செயலாளர் அன்புராஜ் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு சிறப்புரை வழங்கினார். திமுக ஆதி திராவிடர் நலக் குழு மாவட்ட அமைப்பாளர் ராமு, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக மாநில கொள்கை விளக்க அணி செயலாளர் வந்தியத்தேவன், எழுத்தாளர் இமயம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில குழு உறுப்பினர் ரமேஷ்பாபு, ஒன்றிய செயலாளர் குமரகுரு, விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் நீதி வள்ளல், திமுக மாணவர் அணி துணை அமைப்பாளர் செல்வமணி ஆகியோர் கலந்துகொண்டு வைக்கம் போராட்டத்தில் பெரியாரின் சாதனைகள், திராவிட மாடல் திமுக அரசு கடந்த மூன்று ஆண்டில் தமிழ்நாட்டில் செயல்படுத்திய வரலாற்று சாதனைகள் குறித்து விளக்க உரையாற்றினர். முடிவில் மாவட்ட இளைஞரணி செயலாளர் பெரியார் மணி நன்றி கூறினார். இதில் திராவிடர் கழகம், திமுக, விடுதலை சிறுத்தைகள் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, மதிமுக உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.