பாமக மாவட்ட அலுவலகத்தில் நியமன மனு பெறுதல் ஆலோசனை கூட்டம்
பழனி விஜயரங்க முதலி தெருவில் உள்ள பாமக மாவட்ட அலுவலகத்தில் நியமன மனு பெறுதல் தொடர்பான ஆலோசனை கூட்டம்
பாட்டாளி மக்கள் கட்சியின் திண்டுக்கல் வடக்கு மாவட்டத்தில் உள்ள பழனி சட்டமன்ற தொகுதியின் தலைவர், செயலாளர் மகளிர் சங்க தலைவர், செயலாளர் பொறுப்புகளுக்கு நியமன மனு பெறுதல் தொடர்பான ஆலோசனை கூட்டம் பழனியில் உள்ள கட்சி மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது. இதற்கு மாவட்ட செயலாளர் அ.வைரமுத்து தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் ந.சதீஷ்குமார், பாட்டாளி தொழிற்சங்க பேரவை மாவட்ட செயலாளர் ராஜரத்தினம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்துக்கு மாநில வன்னியர் சங்க செயலாளர் க.வைத்தி, தஞ்சை மண்டல பொருப்பாளர் அய்யப்பன், தென்காசி மத்திய மாவட்ட செயலாளர் இசக்கிமுத்து ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துகொண்டு மனுக்களை பெற்றனர். நிகழ்ச்சியில் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஜாகீர்உசேன், மகாமுனிதுரை, மாவட்ட துணை செயலாளர் வேளாங்கண்ணி, பழனி நகர தலைவர் கார்த்தி, நகர அமைப்பு தலைவர் மாரிமுத்து, நெய்காரப்பட்டி பேரூர் செயலாளர் பெரியசாமி, ஆயக்குடி பேரூர் செயலாளர் முத்துச்சாமி உள்பட பலர் கலந்துகொண்டனர். பழனி நகரச் செயலாளர் பிரபாகரன் நன்றியுரை வழங்கினார்.