புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே மங்கனூரை சேர்ந்தவர் அருளானந்து. கூலித்தொழிலாளி. இவரது குடிசை வீட்டில் நேற்றிரவு மின் கசிவால் தீ பற்றி எரிந்தது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் துரிதமாக செயல்பட்டு தீயை அணைத்தனர். இருப்பினும், குடும்ப அட்டை உள்ளிட்ட அரசு ஆவணங்கள், வீட்டு உபயோக பொருட்களும் இருசக்கர வாகனம் தீயில் கருகின.