ஜன.4ல் திருவெணபா உற்சவம் தொடக்கம்.
மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் திருவெண்பா உற்சவம் ஜன.4ல் தொடங்குகிறது.
மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் மார்கழி திருவெண்பா உற்சவம் அடுத்த மாதம் ஜனவரி 4-ந் தேதி தொடங்கி ஜனவரி 13-ந் தேதி வரை நடைபெறுகிறது 10 நாட்கள் நடைபெறும் விழாவில் எம்பிரான் மாணிக்கவாசகபெருமான் 100 கால் மண்டபத்தில் நடராஜர் சன்னதி முன்பு உள்ள சவுக்கையில் எழுந்தருளுவார். அங்கு அடியார்கள் திருவெம்பாவை பாடி தீபாராதனை நடந்து முடிந்து 4 ஆடி வீதிகளை வலம் வருவார். விழாவின் கடைசி நாளான 13-ந் தேதி திருவாதிரை அன்று பொன்னூஞ்சல் மண்டபத்தில் சுவாமி ரிஷப வாகனத்திலும் அன்னை மீனாட்சி மர சிம்மாசனத்திலும் எழுந்தருளி ஆடி வீதிகளில் வீதியுலா நடைபெறவுள்ளது.