குரூப் - 4' பயிற்சி வகுப்பு காஞ்சி கலெக்டர் அறிவிப்பு
காஞ்சிபுரத்தில் நாளை முதல் குரூப் 4 பயிற்சி வகுப்புகள் நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டம் வழியாக, பல்வேறு போட்டி தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.அந்த வகையில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் ஒருங்கிணைந்த குடிமை பணிகள் 'குரூப் - 4' பதவிகளுக்கான அறிவிப்பு, 2025 ஏப்ரல் மாதம் வெளியிடப்பட உள்ளது.இத்தேர்வுக்கு தயாராகும் காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த போட்டி தேர்வர்கள் பயனடையும் வகையில், காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு பயிற்சி மையத்தில் நேரடி பயிற்சி வகுப்புகள் மற்றும் மாதிரி தேர்வுகள், வரும் 27 முதல் துவங்கி தொடர்ந்து நடைபெற உள்ளது. இப்பயிற்சி வகுப்பில் பங்கேற்க விருப்பம் உள்ளவர்கள், தங்களது புகைப்படம் மற்றும் ஆதார் அட்டை நகல் ஆகிய விபரங்களுடன், காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை நேரில் தொடர்பு கொள்ளவும். மேலும் விபரங்களுக்கு, 044 - -2723 7124 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம் என, காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி தெரிவித்துள்ளார்.