காஞ்சிபுரத்தில் வேன் - கார் மோதி 15 பேர் காயம்
காஞ்சிபுரத்தில் வேன் கார் மோதி 15 பேர் சிறு காயங்களுடன் உயிர் தப்பினர்
காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் இருந்து, இருங்காட்டுக்கோட்டையில் உள்ள ஹூண்டாய் தொழிற்சாலைக்கு, வேன் ஒன்று, 16 பேரைஏற்றிக்கொண்டு, நேற்று அதிகாலை 5:00 மணிக்கு புறப்பட்டு சென்றது.சென்னை -- பெங்களூரு தேசிய நெடுஞ் சாலையில், வெள்ளைகேட் அருகே தேசிய நெடுஞ்சாலையில், அதிகாலை 5:30 மணிக்கு வேனை திருப்ப முயன்றபோது, கிருஷ்ணகிரியில் இருந்து வந்த 'டாடா சுமோ' கார் மோதியது. காரை மணிரத்னம் என்பவர் ஓட்டினார். இதன் காரணமாக, வேன் சாலையிலேயே கவிழ்ந்தது. காரின் முன்பக்கம் சேதமடைந்தது. இதில், வேன் மற்றும் காரில் இருந்த 15 பேர் லேசான காயமடைந்தனர். காயமடைந்தவர்களை காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு, போலீசார் அனுப்பி வைத்தனர். பின், சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். இரு வாகனங்களையும் பறிமுதல் செய்த பொன்னேரிக்கரை போலீசார் விசாரிக்கின்றனர்.