அரிட்டாபட்டி மக்களிடையே அன்புமணி ராமதாஸ் சந்திப்பு.
மதுரை அருகே அரிட்டாப்பட்டியில் மக்களை சந்தித்து அன்புமணி ராமதாஸ் பேசினார்.
மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள அரிட்டாபட்டியில் பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று (டிச.26) மக்களை சந்தித்து உரையாடினார். அவர் பேசும் போது , தமிழகத்தில் எங்கே அநியாயம் நடந்தாலும் அங்கே பாட்டாளி மக்கள் கட்சி இருக்கும். மத்திய அரசாக இருந்தாலும் சரி மாநில அரசாக இருந்தாலும் சரி எங்களுக்கு அச்சம் கிடையாது. இங்கு ஐந்தாயிரம் ஏக்கர் அல்ல, ஒரு சென்ட் இடத்தில் கூட மண்ணைக் கூட எடுக்க விடமாட்டோம் என்று பேசினார்.