தர்மபுரி மாவட்டத்தில் பரவலாக கனமழை
குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை
தமிழகத்தில் தர்மபுரி மாவட்டம் பல்வேறு மாவட்டங்களில் குறைந்த காற்றழுத்த தாழ்வுமண்டலம் காரணமாக கனமழை பொழிய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டிருந்தது இதனை அடுத்து டிசம்பர் 26 இன்று காலை முதல் தர்மபுரி அரூர்,பாலக்கோடு, பாப்பிரெட்டிப்பட்டி,மொரப்பூர்,நல்லம்பள்ளி, உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழையும் பல இடங்களில் சாரல் மழையும் பொழிந்து வருகிறது.இதனால் சாலைகளில் மழைநீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடுகிறது.மேலும் பல இடங்களில் பாதுகாப்பு கருதி மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.