விராலிமலை தாலுகா சின்னசமுத்தி ரத்தை சேர்ந்தவர் ரமேஷ்(40). குடுகுடுப்பைகாரர். வயிற்று பிழைப்புக்காக விராலிமலை ஒன்றியம் ஆலங்குளம் கிரா மத்தில் கடந்த 3 நாட்களாக மகன் லோகநாதனுடன்(12) தங்கியிருந்தார். நேற்று முன் தினம் இரவு அதே பகுதியில் விராலிமலைகீரனுார் சாலையில் உள்ளபயணிகள் நிழற்குடையில் மகனை அமர வைத்துவிட்டு, அருகில் உள்ள வீட்டில் இரவு உணவு வாங்க சென்றார். சாலையை கடக்க முயன்றபோது அடையாளம் தெரி யாத வாகனம் மோதியதில் தலையில் பலத்த காயமடைந்த ரமேஷ் அதே இடத்தில் உயி ஏழந்தார். மாத்துார் போலீசார் வழக்குப்ப திந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.