தாராபுரம் சுற்றுவட்டார பகுதியில் மர்ம சத்தம் கேட்டதால் பொதுமக்கள் பீதி அடைந்தனர். தொடர் சத்தத்தால் பொதுமக்கள் பீதி அடைந்தனர்.
தாராபுரம் சுற்றுவட்டார பகுதியில் மர்ம சத்தம் கேட்டதால் பொதுமக்கள் பீதி அடைந்தனர். தொடர் சத்தத்தால் பொதுமக்கள் பீதி அடைந்தனர்.
தாராபுரம் சுற்றுவட்டார பகுதியில் மர்ம சத்தம் கேட்டதால் பொதுமக்கள் பீதி அடைந்தனர். தொடர் சத்தத்தால் பொதுமக்கள் பீதி அடைந்தனர். திருப்பூர் மாவட்டம் தாராபுரம் மூலனூர் பகுதிகளில் சுமார் 3.30 மணி அளவில் தொடர்ந்து இரண்டு முறை திடீரென பலத்த சத்தம் ஏற்பட்டது. இந்த அதிபயங்கர சத்தத்தால் வீடுகள், வர்த்தக நிறுவனங்கள் போன்றவற்றில் அதிர்வும் உணரப்பட்டது.இதனால் வீடுகள், கடைகளிலிருந்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். திடீரென ஏற்பட்ட அதிக சத்தத்திற்கு என்ன காரணமாக இருக்கும் என்று தெரியாமல் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர்.இது குறித்து மூலனூர் பகுதியில் உள்ள பொதுமக்கள் கூறும்பொழுது வெடிச்சத்தம் நிலநடுக்கம் போன்று உணர்ந்ததாகவும், இதனால் வீடுகள், கடைகளை விட்டு வெளியேறி நின்றபடி வானத்தை பார்த்துக் கொண்டு என்ன சத்தம் என்று குழம்பி போய் நின்றனர். மேலும், இதேபோல் மாதம் ஒரு முறை இதேபோன்று சத்தம் கேட்டதாகவும் தெரிவித்தனர்.சத்தத்தின் அதிர்வானது தொடர்ந்து இரண்டு முறை சத்தத்துடன் கேட்டதாகப் பொதுமக்கள் கூறினர். இது குறித்து திருப்பூர் மாவட்ட நிர்வாகமும் மாவட்ட காவல் துறையும் இந்த சத்தத்திற்கு என்ன காரணம் என்று ஆய்வு செய்து மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்றனர் மேலும் திருப்பூர் மாவட்டத்திலுள்ள தாராபுரம், மூலனூர், பொன்னிவாடி, அலங்கியம் , கன்னிவாடி உள்ளிட்ட பகுதிகளில் அதிக அளவில் வெடி சத்தம் உணரப்பட்டதாக பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் தெரிவித்தனர். மேலும் மூலனூர் பகுதியில் உள்ள டைல்ஸ் கடையை கடையின் உரிமையாளர் சாகுல் ஹமீத் கூறுகையில் கடந்த மாதம் இதே போன்று சத்தம் உணரப்பட்டது அப்போதும் இதேபோல் விழா அதிர்வு ஏற்பட்டது பதிவாகியுள்ளது. அதேபோல் இன்று மூன்று முப்பது மணி அளவில் ஏற்பட்ட சம்பவமும் ஏற்பட்டுள்ளது இந்த காட்சிகளும் சிசிடிவி பதிவுகளில் பதிவு செய்ய ப்பட்டுள்ளது. மேலும் இந்த வெளிச்சத்தம் எங்கிருந்து வருகிறது இதனால் வருகிறது என்று தெரியாமல் பொதுமக்கள் புலம்பி வருகின்றனர்.