இரு சக்கர வாகனங்கள் மோதிய விபத்தில் முதியவர் பலி
சிசிடிவி காட்சிகள் வெளீயீடு
பல்லடத்தை அடுத்த கோவில் வழி பகுதியை சேர்ந்தவர் ராஜேஸ்வரன் (55).கோவில் வழியில் இருந்து தொங்குட்டி பாளையம் செல்ல தனது இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.தாராபுரம் சாலையில் குப்புச்சி பாளையம் பிரிவு அருகே வந்து கொண்டிருந்த போது எதிரே வேகமாக வந்த இரு சக்கர வாகனம் மோதியது.மோதிய வேகத்தில் தூக்கி வீசப்பட்ட ராஜேஸ்வரன் பலத்த காயமடைந்தார்.இந்த விபத்தினை பார்த்த பொதுமக்கள் அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் திருப்பூர் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மருத்துவமனையில் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.இதனை அடுத்து அவரது உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த அவினாசிபாளையம் போலீசார் இந்த விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.வேகமாக வந்த இரு சக்கர வாகனம் மோதிய சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.