வண்டல் மண் எடுப்பதாக கூறி கிராவல் மண் திருட்டு
அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை என பொதுமக்கள் குற்றச்சாட்டு
பல்லடம் வட்டம் பொங்கலூர் அருகே உள்ள செம்மடைபாளையம் நீர்நிலை குட்டையில் வண்டல் மண் என்கின்ற போர்வையில் கிராவல் மண் கனராக ஹிட்டாச்சி இயந்திரங்களை பயன்படுத்தி வெட்டி எடுத்து இருபதுக்கும் மேற்பட்ட கனரக டிப்பர் லாரிகளை வைத்து ஏற்றிச்சென்று விற்பனை செய்யப்பட்டு வருகிறது இது கடந்த 15 நாட்களாக நடைபெற்று வருகிறது இது தொடர்பாக பல்லடம் வட்டாட்சியரிடம் தொடர்ந்து புகார் அளிக்கப்படும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் இல்லை பல கோடி மதிப்பில் இதுவரை மட்டும் கிராவல் மண் கொள்ளை நடைபெற்றுள்ளதாக அப்பகுதி பொதுமக்கள் பரபரப்பாக குற்றச்சாட்டு வைக்கின்றனர் இந்த கிராவல் மண் கொள்ளையில் பல்லடம் வட்டாட்சியர் தொடங்கி கிராம நிர்வாக அலுவலர் வரையும் மற்றும் பொங்கலூர் வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் என அனைவருக்கும் வசூலில் பங்கு இருப்பதால் எவ்வித நடவடிக்கையும் எடுக்க முன்வருவதில்லை என்றும் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர் எனவே இந்த தொடர் கனிமவள கொள்ளைக்கு துணை போகும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்து அவர்களிடம் அபராத தொகையை வசூலிக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.