சாலையோரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த எலக்ட்ரிக் பைக் திடீரென பற்றி எரிந்ததால் பரபரப்பு.
எலக்ட்ரிக் பைக் திடீரென தீப்பிடித்து எரியும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரல்.
பல்லடம் அருகே காரணம்பேட்டையில் இருந்து பருவாய் செல்லும் வழியில் கோவை பகுதியை சேர்ந்த நந்தகுமார் என்பவருக்கு சொந்தமான எலக்ட்ரிக் பைக் சாலையோரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. திடீரென எலக்ட்ரிக் பைக்கில் இருந்து கடும் புகை வெளியேறிய நிலையில் தீ பிடித்து மளமளவென எரிய ஆரம்பித்தது.. சுற்றி இருந்த பொதுமக்கள் அச்சத்தில் உறைந்த நிலையில் எலக்ட்ரிக் பைக் முழுவதுமாக எரிந்து சேதம் அடைந்தது. எலக்ட்ரிக் பைக் தீப்பிடித்து எரியும் வீடியோ காட்சிகள் தற்பொழுது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது...