கருங்குழி பேரூர் திமுக சார்பில் செயல்வீரர்கள் கூட்டம்
கருங்குழி பேரூர் திமுக சார்பில் செயல்வீரர்கள் கூட்டம்
இலத்தூர் வடக்கு ஒன்றிய திமுக கருங்குழி பேரூர் திமுக சார்பில் செயல்வீரர்கள் கூட்டம் காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் க.செல்வம் சட்டமன்ற உறுப்பினர் க. சுந்தர் பங்கேற்பு! காஞ்சி தெற்கு மாவட்டம் ,இலத்தூர் வடக்கு ஒன்றிய திமுக சார்பில், ஒன்றிய செயலாளர் கே.எஸ்.ராமச்சந்திரன் தலைமையில் செயல் வீரர்கள் கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.. இதில் சிறப்பு அழைப்பாளராக காஞ்சி தெற்கு மாவட்ட கழக செயலாளர் க.சுந்தர் எம்எல்ஏ, காஞ்சிபுரம் பாராளுமன்ற உறுப்பினர் க.செல்வம் ஆகியோர் கலந்து கொண்டு கட்சியின் வளர்ச்சி பணிகள் குறித்தும், வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி 200 தொகுதிகளில் அமோக வெற்றி பெற செய்வதற்கு எவ்வாறு செயல்படுவது குறித்தும், புதிய உறுப்பினர்களை சேர்ப்பது குறித்து ஆலோசனைகள் வழங்கினர். இதனைத் தொடர்ந்து கருங்குழி பேரூர் திமுக சார்பில் பேரூராட்சி செயலாளர் சுந்தரமூர்த்தி, பேரூராட்சி தலைவர் தசரதன், துணைத் தலைவர் சங்கீதா, ஆகியோர் தலைமையில் செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்றது இதில் மாவட்ட கழக செயலாளர் க. சுந்தர் எம்எல்ஏ கலந்துகொண்டு கட்சியின் வளர்ச்சி பணிகள் குறித்து பல்வேறு ஆலோசனைகள் வழங்கினார் இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய பேரூர் கழக நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.