பங்களாதேஷ் விவகாரம்: இந்து முன்னணி சார்பில் நாமக்கல்லில் நீதி கோரி ஆர்ப்பாட்டம்!

மாவட்ட பொதுச் செயலாளர் கோபிநாத் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்

Update: 2024-08-27 13:43 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
பங்களாதேஷ் இந்துக்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதையும், இந்து கோயில்கள், வீடுகள் தீக்கிரையாக்கப்படுவதையும் மத்திய அரசு உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி நாமக்கல் பஸ் நிலையம் அருகில் உள்ள பூங்கா சாலையில் நேற்று இந்து முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.மாவட்ட தலைவர் ரமேஷ் தலைமை வகித்தார்,மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.தர்மதுரை, மாவட்ட பொருளாளர் பிரபாகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.மாவட்ட பொதுச் செயலாளர் கோபிநாத் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். ஆர்ப்பாட்டத்தில், வங்காளதேச அரசை கண்டித்தும், மத்திய அரசை வலியுறுத்தியும் பல்வேறு முழக்கங்கங்கள் எழுப்பப்பட்டன. இந்து முன்னணி, ஆர்எஸ்எஸ் அமைப்பினர், பாஜகவினர் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

Similar News