கீரமங்கலத்தில் நெகிழ்ந்த அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன்
கீரமங்கலத்தில் நெகிழ்ந்த அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன்
ஆலங்குடி அருகேயுள்ள கீரமங்கலம் பேரூராட்சிக்குட்பட்ட அறிவொளி நகரில் சுமார் 70க்கும் மேற்பட்ட குடும்பங்களில் நரிக்குறவர் இன மக்கள் வசித்து வருகின்றனர். இந்தநிலையில், அப்பகுதி மக்களின் குலதெய்வமான காளி கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் எருமை மாட்டை வெட்டி காளியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தி திருவிழா கொண்டாடுவது வழக்கம். அதேபோல், தேய்பிறை அஷ்டமியையொட்டி, நேற்று இரவு கிடாவெட்டு பூஜை நடந்தது. இதில், கலந்து கொண்ட தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதனுக்கு அப்பகுதி பெண்கள் ஆரத்தி எடுத்தும், பாசி மாலை அணிவித்து வரவேற்பு அளித்தனர். நரிக்குறவர் இன மக்களின் உற்சாக வரவேற்பைக் கண்டு அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் நெகிழ்ந்து போனார்.