திருவரங்குளத்தில் அசம்பாவிதம் ஏற்படும் அபாயம்
திருவரங்குளத்தில் அசம்பாவிதம் ஏற்படும் அபாயம்
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி தாலுகா, திருவரங்குளத்தில் உள்ள மளிகை கடை முன்பு மின்மாற்றி உள்ளது. இந்த மின்மாற்றியின் அருகே சென்று தான் பொதுமக்கள் அந்த மளிகை கடையில் பொருட்கள் வாங்கி செல்கின்றனர். இந்நிலையில், இந்த மின்மாற்றிக்கு செல்லும் மின் கம்பிகள், தாழ்வாக செல்வதால் அசம்பாவிதம் ஏற்படும் நிலை உள்ளது. எனவே, ஏதேனும் அசம்பாவிதம் ஏற்படும் முன்பு மின்வாரிய அதிகாரிகள் உடனடியாக இதனை சரி செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.