விதை பதப்படுத்தும் மையம் கட்டுவதற்கு அடிக்கல்
விதை பதப்படுத்தும் மையம் கட்டுவதற்கு அடிக்கல்
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி சட்டமன்ற தொகுதி, திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியம், வம்பன் விதைப்பெருக்கப் பண்ணையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் கலந்து கொண்டு, ரூபாய் 77 லட்சம் மதிப்பீட்டில் 250 மெட்ரிக் டன் விதை சேமிப்புக் கிடங்குடன் கூடிய நவீன மயமாக்கப்பட்ட விதை பதப்படுத்தும் மையம் கட்டுவதற்கான கட்டுமானப் பணிகளை அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். தொடர்ந்து மரக்கன்று நடவு செய்தார். இந்நிகழ்ச்சியில், புதுக்கோட்டை ஆர்டிஓ கௌசல்யா, திருவரங்குளம் ஒன்றிய சேர்மன் வள்ளியம்மை தங்கமணி, ஆலங்குடி தாசில்தார் பெரியநாயகி உட்பட உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.