தமிழ் புலிகள் கட்சி சார்பில் எஸ்.பி-யிடம் மனு
திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தமிழ் புலிகள் கட்சி சார்பில் எஸ்.பி-யிடம் மனு அளிக்கப்பட்டது
தமிழ்புலிகள் கட்சி திண்டுக்கல் கிழக்கு மாவட்ட செயலாளர் அறிவரசு, திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கொடுத்த மனுவில், எங்கள் கட்சியில் மாநில தலைவர் திருவள்ளுவன் மக்களுக்கான கோரிக்கைகளுக்காக போராடுகிறார். இதனால் அவருக்கு பல தரப்பினரிடமிருந்த அச்சுறுத்தல்கள் உள்ளது. எனவே அவருக்கு 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் எனக்குறிப்பிட்டுள்ளார்.