வேலகவுண்டம்பட்டி அருகே கொதிக்கும் தண்ணீரில் விழுந்த பெண் பலி.
வேலைகவுண்டம்பட்டி அருகே கொதிக்கும் தண்ணீரில் விழுந்த பெண் சிகிச்சை பலனின்றி பலி.
பரமத்தி வேலூர்,ஆக.28- நாமக்கல் மாவட்டம், வேலகவுண்டன்பட்டி அருகே உள்ள புள்ளாச்சிபட்டி அருந்ததியர் தெருவை சேர்ந்தவர் பொன்னம்மாள் (75) கூலித் தொழிலாளி. பொன்னம்மாள் கடந்த 15- ஆம் தேதி குளிப்பதற்காக விறகு அடுப்பில் பாத்திரம் ஒன்றில் தண்ணீர் காய வைத்துக் கொண்டிருந்தார். தண்ணீர் நன்றாக சூடேறிக் கொண்டிருந்தபோது பொன்னம்மாள் திடீரென எழுந்தபோது நிலை தடுமாறி சுடு தண்ணீர் இருந்த அடுப்பின் மீது விழுந்து விட்டார். இதில் அவர் மீது கொதித்துக் கொண்டிருந்த சுடுதண்ணீர் அவர் மேல் ஊற்றியதில் பலத்த காயம் ஏற்பட்டது. உடணடியாக அவரை காப்பாற்றி அவரை நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பொன்னம்மாள் திங்கட்கிழமை இரவு உயிரிழந்தார். தகவல் அறிந்து அங்கு வந்த போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். சம்பவம் குறித்து வேலகவுண்டம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.