அ.தி.மு.க., பிரமுகருக்கு பீர் பாட்டில் குத்து. மங்கலம்பேட்டை அருகே பரபரப்பு
பாஜக, திமுக நிர்வாகிகளுக்கு போலீஸ் வலை.
விருத்தாசலம் அடுத்த மங்கலம்பேட்டை மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்த பெருமாள் மகன் ராதாகிருஷ்ணன் (வயது.55), அ.தி.மு.க., பிரமுகர். இவரும், அவரது உறவினரான கோணாங்குப்பம் கிராமத்தை சேர்ந்த கோபால் மகன் செல்வராசு என்பவரும் சம்பவத்தன்று (26-ம் தேதி) இருசக்கர வாகனத்தில் கோணாங்குப்பத்தில் உள்ள கிருஷ்ணர் கோயிலுக்கு சென்று விட்டு, மங்கலம்பேட்டைக்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர். அப்போது, கர்னத்தம் கிராமம் அருகே உள்ள ஒரு ரைஸ்மில் அருகில் வந்தபோது, எம்.அகரம் கிராமத்தை சேர்ந்த அரியமுத்து மகன் அசோக், முத்துலிங்கம் மகன் பா.ஜ.க., பிரமுகர் தமிழ்செல்வன், பஞ்சாட்சரம் மகன் திமுக ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் திருஞானம் ஆகியோர் அங்கு நின்றுகொண்டு, முன் விரோதம் காரணமாக, ராதாகிருஷ்ணனை பார்த்து நில்லுடா எனக் கூச்சலிட்டு அழைத்து, ஆபாசமாகத் திட்டியதாகவும், இதனால், இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த செல்வராசு வாகனத்தை பதற்றத்துடன் நிறுத்த, கீழே விழுந்த அவரை ஆபாசமாகத் திட்டிய அசோக் உடைந்த பீர் பாட்டிலால் ராதாகிருஷ்ணன் கையில் கிழித்ததில், பலத்த ரத்தக் காயம் ஏற்பட்டதாகவும், தமிழ்செல்வன் திருஞானம் ஆகியோர் அவரை கையாலும், காலாலும் அடித்து, உதைத்து, கொலை மிரட்டல் விடுத்தததாகவும் கூறப்படுகிறது. இதில், பலத்த காயமடைந்த ராதாகிருஷ்ணன் சிகிச்சைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டு, பின் மேல் சிகிச்சைக்காக விழுப்புரம் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பலத்த காயமடைந்த ராதாகிருஷ்ணனுக்கு கையில் 14 தையல் போடப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து, மங்கலம் பேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து, பாஜக, திமுக பிரமுகர்களை தேடி வருகின்றனர்.