வாலிபர் மீது சரக்கு வாகனத்தை மோதி கொலை
கொடைக்கானல் கூக்கால் பகுதியில் முன் விரோதம் காரணமாக வாலிபர் மீது சரக்கு வாகனத்தை மோதி கொலை செய்த 6 பேருக்கு போலீசார் வலைவீச்சு
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மேல்மலை விடுதலைநகர் பகுதியில் சேர்ந்த முத்தையா மகன் ராமு(22) இவருக்கும் பழம்புத்தூர் பகுதியில் லாரி சர்வீஸ் நடத்தி வரும் கருப்பண்ணன்(32) என்பவருக்கும் முன்விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கூக்கால் பகுதிக்கு டூவீலரில் சென்று கொண்டிருந்த ராமு மீது கருப்பண்ணன்(32), பாண்டி(30), பழனிச்சாமி(56), கிஷோர்(23), ஜெயக்குமார்(36), சிவா(22) ஆகிய 6 பேரும் சேர்ந்து சரக்கு வாகனத்தில் மோதினர். இதில் கீழே விழுந்த ராமுவை சரக்கு வாகனத்தில் தூக்கி போட்டு கொண்டு சென்று மற்றொரு இடத்திற்கு கொண்டு சென்று தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் படுகாயம் அடைந்த ராமுவை சாலை ஓரத்தில் உள்ள புதரில் தூக்கி வீசி விட்டு சென்றனர். சாலை ஓரத்தில் பலத்த காயங்களுடன் கிடந்த ராமுவை மீட்டு பெற்றோர்கள் கொடைக்கானல் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு ராமுவை பரிசோதித்த டாக்டர்கள் இறந்து விட்டதாக கூறினர். இது குறித்து கொடைக்கானல் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து கொலை செய்த 6 பேரையும் வலை வீசி தேடி வருகின்றனர்.