புதிய நிர்வாகக் குழு பதவியேற்பு விழா!
தூத்துக்குடி அகில இந்திய வர்த்தக தொழில் சங்கத்தின் புதிய நிர்வாகக்குழு உறுப்பினர்களுக்கு கனிமொழி எம்பி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
தூத்துக்குடி அகில இந்திய வர்த்தக தொழில் சங்கத்தின் 2024-2026 ஆகிய இரண்டாண்டிற்கான நிர்வாகக் குழு பதவியேற்பு விழா சத்யா ரிசார்டில் வெகு நடைபெற்றது. விழாவிற்கு சிறப்பு விருந்தினராக, தூத்துக்குடி தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி, சிறப்பு அழைப்பாளர்களாக சென்னை அடையார் ஆனந்த பவன் மற்றும் A2B வெஜ் ரெஸ்டாரண்டின் மேலாண்மை இயக்குநர் ஸ்ரீனிவாச ராஜா, தமிழக சமூக நலத்துறை மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி.கீதா ஜீவன் மற்றும், தூத்துக்குடி மாநகராட்சியின் மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் கலந்து கொண்டனர். அகில இந்திய வர்த்தக தொழில் சங்கத்தின் முன்னாள் தலைவர் டிஆர் தமிழரசு வரவேற்றார். பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி அவர்கள் 10 புதிய நிர்வாகக்குழு உறுப்பினர்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். தலைவராக சங்கர் மாரிமுத்து, பொதுச் செயலாளராக சுரேஷ்குமார், பொருளாளராக, ஜோசப் காஸ்காரினோ, துணைத் தலைவர்களாக ஜேசையா வில்லவராயர். சிசில் மச்சாது, பிரேம் பால் நாயகம், இணைச் செயலாளர்களாக பிண்டோ வில்லவராயர், ரெனாஸ்டு சில்வஸ்டர், பொன்குமரன் மற்றும் நிர்வாகச் செயலாளர் பாலமுருகன் ஆகியோர் பொறுப்பேற்றனர்.