ஆலங்குடியில் குறுவட்ட அளவிலான தடகள போட்டி
ஆலங்குடியில் குறுவட்ட அளவிலான தடகள போட்டி
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் குறுவட்ட அளவிலான தடகள போட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் நடைபெற்றது. இவ்விழாவில் அமைச்சர் மெய்யநாதன் கலந்துகொண்டு போட்டியை துவங்கி வைத்தார். தொடர்ந்து போட்டி நடைபெற்று முடிவடைந்தது. இந்நிலையில் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு வெற்றி சான்றிதழ் மற்றும் பதக்கங்கள் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் வழங்கப்பட்டன.