தாராபுரத்தில் மூன்று வீடுகளில் ரொக்க பணம் நகை மற்றும் இருசக்கர வாகனம் கொள்ளை தாராபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை!
தாராபுரத்தில் மூன்று வீடுகளில் ரொக்க பணம் நகை மற்றும் இருசக்கர வாகனம் கொள்ளை தாராபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை!;
தாராபுரத்தில் மூன்று வீடுகளில் ரொக்க பணம் நகை மற்றும் இருசக்கர வாகனம் கொள்ளை தாராபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை! திருப்பூர் மாவட்டம் தாராபுரம் புதுக்கோட்டை மேடு பெருமாள் கோவில் அருகே வசித்து வரும் பெங்களூர் நிதி நிறுவனம் நடத்தி வரும் முருகேஷ் வயது 33 ராஜேஸ்வரி வயது 32, தம்பதியினர் மற்றும் சாக்கு வியாபாரி அப்துல் ரஹீம் பரக்கத் நிஷா, ஆகியோரது வீடுகள் உட்பட 3,வீடுகளில் அடுத்தடுத்து 12,000 ரொக்க பணம் அரை பவுன் தங்க மோதிரம் மற்றும் (டிஸ்கவர்) இருசக்கர வாகனம் கொள்ளை . இன்று கொள்ளையடித்துச் சென்றனர். இரண்டு இரு சக்கர வாகனங்களில் அருவாள், கத்தி, கடப்பாரை, உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் முகமூடி -மற்றும் ஹெல்மெட் அணிந்தும் வந்து ஐந்து கொள்ளையர்கள் கைவரிசை காட்டியுள்ளதாக பொதுமக்கள் போலீசாரிடம் புகார் தெரிவித்தனர்.புகாரின் பேரில் தாராபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து வழக்கு பதிவு செய்து அருகில் ஏதாவது சிசிடிவி கேமராக்கள் உள்ளதா எனவும் சந்தேகத்திற்கு இடமான நபர்கள் யார் அப்பகுதியில் உள்ளனர் எனவும் போலீசார் துருவித் துருவி விசாரணையை தொடங்கியுள்ளனர். இந்த நிலையில் அங்குள்ள சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி போலீசார் சிசிடிவி காட்சிகளை வைத்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர் இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.