சேலம் அரசு கலைக் கல்லூரியில் கூட்டுறவு துறை சார்பில்
சர்வதேச கூட்டுறவு கருத்தரங்கம்-
இந்தியாவின் நிலையான வளர்ச்சியில் (SDGs) கூட்டுறவுத் துறையின் பங்கு என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடந்தது. சேலம் அரசு கலைக்கல்லூரி கூட்டுறவுத்துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கருத்தரங்கை கல்லூரி முதல்வர் செண்பக லட்சுமி குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். இந்தியாவின் நிலையான பொருளாதார வளர்ச்சியில் கூட்டுறவின் பங்கு என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கின் நோக்கம் குறித்து துறை தலைவர் சுரேஷ்பாபு பேசினார். மேலும் MBA துறைத்தலைவர் டாக்டர் சரவணகுமார் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார். தொடர்ந்து இரு அமர்வுகளாக நடைபெற்ற கருத்தரங்கில், கொரோனா பாதிப்புக்கு பிந்தைய நிலை, அதனால் ஏற்பட்ட உலகளாவிய தாக்கம், விளைவுகள், உலக நாடுகள் எதிர்கொண்ட சவால்கள், பூகோள வர்த்தக ரீதியாக ஏற்பட்ட மாற்றங்கள், நிதி நிலைமையில் ஏற்பட்ட ஸ்திரமற்ற தன்மை உள்ளிட்டவை குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. இரண்டு அமர்வுகளாக நடைபெற்ற இந்த கருத்தரங்கில், எத்தியோப்பியாவில் உள்ள அவாசா பல்கலைகழக பேராசிரியர் டாக்டர் ஆர் கருணாகரன் மற்றும் எத்தியோப்பியாவில் உள்ள ஒல்லோ பல்கலைகழக பேராசிரியர் டாக்டர் எம் கார்த்திகேயன் பங்கேற்று நிலையான பொருளாதார வளர்ச்சி கூட்டுறவின் அவசியம் குறித்து விரிவாக எடுத்துரைத்தனர்.