சேலம் மத்திய சிறையில் சிறையில் தனபாலுக்கு உடல் நலக்குறைவு:

அரசு ஆஸ்பத்திரியில் மீண்டும் சிகிச்சை

Update: 2024-08-29 03:34 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
சேலம் மாவட்டம் எடப்பாடி சமுத்திரம் பகுதியை சேர்ந்தவர் தனபால் (வயது 47). இவர் ஜெயலலிதாவின் கார் டிரைவர் கனகராஜின் அண்ணன் ஆவார். இவரை கடந்த 10 நாட்களுக்கு முன்பு ஒரு வழக்கில் தாரமங்கலம் போலீசார் கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். அங்கு அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் குணமடைந்த அவரை போலீசார் சிறையில் அடைத்தனர். இதனிடையே நேற்று முன்தினம் இரவு சிறையில் தனபாலுக்கு மீண்டும் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

Similar News